நெய்தல் நிலவியல் மக்கள் ஒழுகலாறுகள்

Authors

  • அ. பாபு முனைவர் பட்ட ஆய்வாளர் திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைவுப் பெற்ற ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி

Abstract

நெய்தல் நிலத்திற்கு தொல்காப்பியம்  வருணன் மேய பெருமணல் உலகம் எனக் குறிப்பிடுகிறது. இதனால்  கடற்கரை என்பதே மணல் நிறைந்த பெருவெளி என்று கொள்ளப்பட்டதாக கருதலாம். சங்கப் பாடல்கள் கடற்கரைப் பகுதி வெண்மணல் வெளியாக இருந்தது என்றும் கடற்கறையிலேயே இவர்கள் தொழிலின், கருவிகள் கிடந்தன என்றும் கூறுகின்றன. நெய்தல் நிலத்திற்கு இரங்கல் உரிப்பொருளாகும். அது தலைவியின் மன இரங்குதலைக் குறிப்பதாகும். தலைவன் இரங்குதல் இயல்பானது அன்று அதனால் தலைவி  இரங்குதல் என்று கூறப்படுகிறது. கடல்மேல் சென்ற தலைவன் வாராமையின் அவன் நிலை குறித்துத் தலைவிக்கு ஏற்படும் ஏக்கம் இரங்கல் எனப்படும். தலைவனுக்கு வழியில் என்ன நேர்ந்த்தோ என்றும் அவனுக்கு ஏற்படும் இடையூறுறெண்ணித் தனக்கு ஏற்பட்டதென உணர்ந்தும்  வருந்துதலும் இயல்பு இந்நிலையும் இரங்கல் எனப்படும். மாலை நேரங்களில் மகளிர் தங்கள்  கணவர் மீன்பிடித்துத் திரும்பி வருகிறார்களா? என்று கடற்கரை வந்து காத்திருப்பர். எனவே இரங்கல் நெய்தல் எனப் பெயர்பெற்றது

Downloads

Published

2025-05-01