கிடை புதினத்தில் நிலவியல் பண்பாடு

Authors

  • போ. மணிவண்ணன் தமிழ்த் துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசி

Abstract

நிலவியல் பண்பாடு என்பது ஒரு நிலத்தின் தற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளில் எடுத்துக் கொள்ளும் இடம் என்று கருதலாம். அது வாழ்வியலில் மட்டுமின்றி இலக்கியத்திலும்  எதிரொலிக்கும். எழுத்தாளர் கி.ரா. அவர்களின் படைப்புகளின் பின்னணி பெரும்பாலும் நிலவியல்  பண்பாடு சார்ந்ததாகும். கிடை எனும் ஆடு மேய்க்கும் தொழிலின் நிறை குறைகள் அதன் வம்பாடுகளுடன் கிடை நாவலில் விவரிக்கப்படுகின்றன. முல்லை நிலமாகிய மேய்ச்சல் நிலப் பண்பாடும் மருத நிலமாகிய உழவுப்பண்பாடும் ஒன்றையொன்று சார்ந்தும் பகைத்தும் வாழும் முறைகளை எடுத்துரைப்பது அந்நூலின் தனித்தன்மையாகும். திறவுச் சொற்கள்: கிடை, கிடை மறித்தல், கீதாரி, ஆச்சிக்குட்டி, தருமப்பால், கிடைப் பிச்சை க்காரர்கள், உப்புக்கண்டம், குறிகேட்டல், முள்வாங்கி, தொரட்டி

Downloads

Published

2025-05-01