பெருங்கடுங்கோ நுவலும் பாலை நிலப் பண்பாடு

Authors

  • ம. தேவி தமிழ்த்துறைத் தலைவர், ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பபாளையம், கோவை

Abstract

பண்பாடு என்பது வரலாறு, பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வியல்  நெறிமுறைகளை உள்ளடக்கியது ஆகும். உணவு, இசை, மொழி, தொழிற்சார்கூறுகள், சமயம்,  நம்பிக்கைகள் ஆகியவை பண்பாட்டுக்குள் அடங்கும். பொதுவாக, பண்பாடு என்பது மனித இனத்தின் செயல் பாடுகளை குறிப்பதாக அமைகின்றது.  பண்பாடு என்பது மூன்று மூலகங்களை உள்ளடக்கியதாகும். அவை, பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை), மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு) என்பவை ஆகும். வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானம் ஆகும். அவை பண்பாட்டின் ஏனைய கூறுகளை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள்  என்பன, வெவ்வேறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப்  பொது வழக்கங்களை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப் படுத்தும் இந்த நெறிமுறைகள் விதிகள் அல்லது சட்டங்கள் எனப் பொதுவாக வழங்கப் படுகின்றன. மூன்றாவதான  பொருள்கள் என்பது, பண்பாட்டின் பெறுமானங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. மேற்கண்ட வரையறைக்கு ஏற்ப  பெருங்கடுங்கோ பாடல்களில் இடம் பெற்றுள்ள    பாலை நிலப் பண்பாடு குறித்த செ#திகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Published

2025-05-01