பத்துப்பாட்டில் நிலவியல் பண்பாடு
Abstract
இலக்கியங்கள்மனித சமூகச் சிந்தனைகளை ஒருமித்து உரைக்கக்கூடியன. அந்தந்த இனமக்களின் பண்பாட்டுக் கருத்தாக்கங்களுக்கு ஏற்ப அவர்கள் உருவாக்கும் இலக்கியப்; பொருண்மைகளும் உள்ளன. அவ்வாறு உருவாகும் இலக்கியங்கள் பல்வேறு சமூகக் கருத்தாக்கங்களைக் கொண்டு விளங்குகின்றன. இவ்வகையில், தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதை உணரமுடிகிறது. தமிழ்மொழியில் நிலைபேறுடைய இலக்கியங்களாகச் சொல்லப்படுவன சங்க இலக்கியங்கள். அவற்றுள் ஒன்றான பத்துப்பாட்டு; பலநிலைகளில் சிறப்பானதாக கருத இடமளிக்கிறது. பத்துபாட்டில் இடம்பெறும் இலக்கியங்கள் நிலவியல் சார்ந்த கருத்துகளை நிரம்பப் பெற்றுள்ளன. அதிலும் ஆற்றுப்படை இலக்கியங்கள் பழந்தமிழ் நிலப்பரப்பையும் நில அமைப்பினையும் பதிவு செய்துள்ளன. இந்த அடிப்படையில் பழந்தமிழரின் நிலவியல் சார்ந்த பண்பாட்டு வாழ்வியல் சிந்தனைகளின் நிலைகளை நிறுவ இக்கட்டுரை முயல்கிறது.