அகநானூறு காட்டும் எயினர் வாழ்வியலும் நிலவியல் பண்பாடும்
Abstract
இனக்குழுக்கள் முதலில் நாடோடிச் சமூகமாக இருந்து பின் கால்நடைச் சமூகமாக வளர்ந்து வேளாண்மைச் சமூகமாக உருமாற்றம் பெற்றது. வரலாற்று ஆசிரியர்கள் குறிஞ்சியில் இருந்தும் முல்லையில் இருந்தும் தமிழினக் குழுக்களின் தொடக்கத்தினைப் பற்றிய ஆ#வுகளை மேற்கொண்டனர். அவற்றுள் பாலை என்ற நிலப்பரப்பில் உள்ள குடிகளைப் பற்றியும் ஆரா#ந்து பெற்ற முடிவுகள் புதிய நோக்கினைக் கொண்டைவையாக அமைகின்றன. பாலை நிலத்தின் பூர்வகுடிகளாக சங்க இலக்கியத்தாலும் பிற்கால இலக்கிய, இலக்கண ஆசிரியர்களாலும் இனங் காட்டப்படுவோரான எயினர், எயிற்றியர் என அழைக்கப்படும் மக்களின் வாழ்வியலும் நிலவியல் பண்பாடும் பிற திணை குடிகளை காட்டிலும் தொன்மையாக விளங்குவதை நம்மால் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு காட்டும் எயினர் குடிகளின் வாழ்வியலை, நிலவியல் பண்பாடு குறித்த பதிவுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது அகநானூறு காட்டும் எயினர் வாழ்வியலும் நிலவியல் பண்பாடும்