நெடுநல்வாடை முல்லை நில மக்களின் வாழ்வியல் பண்பாடு
Abstract
பெரும் சிறப்பு வாய்ந்த எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் வாழ்வியலைக் காட்டும் கண்ணாடி. ஆசிரியப்பாவால் அமையப்பெற்ற நெடுநல்வாடை, மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் 188 அடிகளைக் கொண்டு இயற்றப்பட்டது. போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு வாடைக் காலமானது நீண்ட நெடும் காலமாக இருப்பதனைப் பற்றி கூறும் நக்கீரனார் அவற்றினூடே நிலம், தெய்வம், மக்களின் வாழ்வு, போர் வீரர்களின் திறம், அரசர்களின் மேன்மை ஆகியவற்றை சிறப்புற விவரிக்கின்றார். நெடுநல்வாடையில் நக்கீரனார் எடுத்தியம்பியுள்ள முல்லை நிலத்தில் வாழும் மக்கள், தெய்வம், உணவு, பறை, தொழில்கள் ஆகியவற்றினை ஆராய்ந்து அவர்களின் வாழ்வியல் பண்பாட்டை எடுத்துரைப்பது இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கம்.