சீவகசிந்தாமணியில் பெருமிதம்சார் பண்பாட்டு படிமங்கள் நோக்கம்
Abstract
தமிழ்க் காப்பியமரபு சமணர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. தமிழ் இலக்கிய வகைகளில் தனிப்பாடல் முதல் வகையாகவும் நெடும்பாட்டு இரண்டாம் வகையாகவும் அதன் தொடர்ச்சியாக காப்பியங்களை வைத்துக் கொள்ள வேண்டும். காப்பிய உருவாக்கத்திற்கு தனிப்பாடல் அடிப்படையாக அமைகின்றன சங்கப்பாடல்கள் தன் உணர்ச்சிப் பாடல்கள். அவற்றில் ஒரே உணர்ச்சி மட்டும்தான் இருக்கும். காப்பியங்களில் பல்வேறு உணர்ச்சிகள் உண்டு. அவற்றில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் முக்கியமானதாகும். மெ#யின் மூலம் உணரப்படும் மெய்ப்பாட்டின் பெருமிதம்சார் உணர்வு சீவகசிந்தாமணி காப்பியத்தில் வெளிப்படும் இடங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்