திருவையாறும் அதன் நிலவியல் பண்பாடும்
Abstract
மனிதன் அறிவின் படிநிலை வளர்ச்சியில் முதலில் நிலத்தையும், காலத்தையும் பகுத்தான். தொல்காப்பியர் இதனை, முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே (தொல்காப்பியம். பொருளதிகாரம் நூ.4) என்கிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தைப் பகுத்ததோடு தெய்வம் முதலாக பறவை, விலங்கு, முதலியவைகளுடன் இசை, இசைக்கருவிகள் பண், மரம், தொழில் போன்ற பன்னிரண்டு வகையாகப் பகுத்து அதற்குக் கருப்பொருள் என்று பெயரிட்டார் தொல்காப்பியர். முதற்பொருள் கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பகுப்புகளும் அதன் அமைப்பு சார்ந்து வகுக்கப் பட்டது. மூன்றாவதாக, அமைந்துள்ள உரிப் பொருள் ” என்பது மக்களின் அகப்பொருள் வாழ்வு குறித்தது. இப்படித்தான் வாழ வேண்டும் என்கின்ற நெறியினை வகுத்து வாழ்ந்து வந்தார்கள் என்பதே தொல்காப்பியம் கூறும் இலக்கணம். சங்க மக்களின் வாழ்க்கைப்பதிவுகள் சங்க இலக்கியங்கள். அறம் தலை நின்ற வாழ்க்கையை பார்க்கிறோம். வயல்கள் நிறைந்தது மருத நிலம். வளம் மிக்க மக்களின் வாழ்க்கை. சில நெறி பிறழ்ந்த செயல்களும் சுட்டப்படுகின்றன. குறிப்பாக தலைவன் தலைவியின் இல்லறம் பெருமை மிக்கதாக இல்லை என்பதை மருத நிலப் பாடல்கள் வழி அறிகிறோம்.