கரிசல் நிலப் பண்பாட்டில் ஆடுகள் (கிடை குறுநாவலை முன்வைத்து)
Abstract
மனிதனின் அறிவார்ந்த நிலையில் வாழ்வியலை வகைப்படுத்த முனைந்தபோது முதலில் நிலத்தைதான் மையப்படுத்துகிறான். முந்து நூலான தொல்காப்பியத்திலும் முதற்பொருளாக நிலமும் பொழுதும் தான் அமைகிறது. மனித வாழ்வின் அடிப்படை முதல் ஆதாரமாக விளங்குவது நிலம். நிலக்கூறுகளின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெ#தல், பாலை என்ற திணைவாழ்வியலை அடையாளப்படுத்தி அறிய முடிகிறது. ஒவ்வொரு நிலத்திற்குமான பண்பாடு இலக்கியங்களின் வாயிலாக வெளிப்பட்டு நிற்கிறது. விலங்குகளை வேட்டையாடிய மனிதன், விவசாயத்தை அறியும் போது விலங்குகளைப் பழக்க ஆரம்பித்தான். அவற்றில் கால்நடைகளான காளைகள், எருதுகள், ஆடுகள் போன்றவை மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை நிலம் பண்படுத்துதலிலும் பயிர் விளை வித்தலிலும் மானுட உயிர்ப்பெருக்கத்திலும் இன்றியமையாத பெரும்பங்கில் துணை நிற்பன. கிடை என்ற குறுநாவல் கூறும் கரிசல் நிலம் சார்ந்த பண்பாட்டில் ஆடுகளின் பங்களிப்பை ஆ#வதாக இக்கட்டுரை அமைகிறது.