குறுந்தொகையில் நெய்தல் பண்பாடு

Authors

  • ச. ரேணுகா முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழ் உயராய்வுத் துறை , அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்
  • மொ. இரவிக்குமார் உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்

Abstract

பண்டைத் தமிழரின் வாழ்வியலை அறிய செப்பேடுகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் மற்றும் புழங்கு பொருட்கள்  அடிப்படையாக அமைகின்றன. இலக்கியங்களில் பதினெண் மேற்கணக்கு நூல்களாக எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் விளங்குகிறது. இலக்கண நூல்களில் பழமையானதாக அகத்தியம் கருதப்பட்டாலும் அந்நூல் கிடைக்கப்பெறவில்லை. இலக்கண நூல்களில் தொல்காப்பியம் அடிப்படைகளை சுட்டும் நூலாக எண்ணப்படுகிறது. தொல்காப்பியர் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று திணைக்குரிய பொருட்களை வகைப்படுத்தியுள்ளார். அவற்றுள் நிலமும் பொழுதும் முதற்பொருளாகும். தொல்காப்பியர் கூறும் முதற்பொருள், கருப்பொருள், மற்றும் உரிப்பொருள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டும் நெய்தல் நிலத்தின் பண்புகளை ஆய்வதாக இவ்வாய்வு கட்டுரை அமைகின்றது.

Downloads

Published

2025-05-01