நிலவியல் நோக்கில் பேரூர்ப்புராணம்

Authors

  • சு. விக்னேசு முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோவை

Abstract

தலபுராணங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பொருண்மைகள் பாடப்பெறுகின்றன. இவற்றுள் மூர்த்தி என்பது இறைவனையும், தலம் என்பது அவ்விறைவன் குடிகொண்ட நிலத்தையும், தீர்த்தம் என்பது அந்நிலங்களுள் இருக்கும் நீர்நிலைகளையும் குறிக்கும். தலம், தீர்த்தம் இரண்டும் நிலவியல் நோக்குடையனவாகவும், மூர்த்தி பண்பாட்டுத் தொடர்பு உடையதாகவும் தோற்றமளிக்கின்றன. தலபுராணங்கள், தமிழ்த் திணைக்கோட்பாட்டினைப் பின்பற்றி, நாட்டுப்படலம், நகரப்படலம், தீர்த்தப்படலம் ஆகியவற்றில் நில அமைப்பைப் பதிவு செய்கின்றன. அவ்வரிசையில் பேரூர்ப்புராணத்தின் நாட்டுப் படலம், நகரப்படலம், தீர்த்தப்படலம் முதலியன, முறையே கொங்குநாட்டு நிலவியல் அமைப்பையும், பேரூரின் நகரமைப்பையும், நீர்வளத்தினையும் எடுத்துரைக்கின்றன. ஆதலால் தலபுராணங்கள் என்பவை நிலவியலைத் தனித்த முறையில் கற்பனை நயங்களுடன் கூறுவன என்ற கருத்தை மெ#ப்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது

Downloads

Published

2025-05-01