ஐங்குறுநூறு - முல்லைவாழ் மக்கள்

Authors

  • அர. சுதா தமிழ்த்துறை கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை ,

Abstract

சங்க இலக்கிய நூல்களில், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக ஐங்குறுநூறு இடம்  பெறுகின்றது. ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த நூறு பாடல்களும் ஐந்து வேறு புலவர்களால் இயற்றப்பட்டதாகும்.பேயனார் எழுதிய ஐங்குறுநூற்றில் முல்லைத்திணைப் பாடல்கள் பத்து தலைப்புகளில் பத்து, பத்து பாடல்களாக மொத்தம் நூறு பாடல்களாக அமைந்துள்ளன. குறிப்பாக காதல் உணர்வுகளையும் நயம்படக் கூறும் செய்யுட்களை உடையது. ஐங்குறுநூற்றில் பத்துப்பிரிவுகள் உள்ளன. அப்பத்துப் பருவங்களில் மக்களின் வாழ்க்கை முறைஶீ காதல் ஒழுக்கம்ஶீ இல்லறப் பண்புஶீ தலைவன்ஶீ தலைவியின் உள்ளப்பாங்குஶீ பாணனஶீ“ பாங்கியின் செயல்பாடுகள் கார்காலச் செயல்பாடுகள் போன்றவற்றை இவ்வா#வு கட்டுரை விளக்குகிறது. ஐங்குறுநூற்றில் முல்லைத்திணையில் 1. செவிலி கூற்றுப் பத்து 2.கிழவன் பருவம் பத்து 3. விரவுப் பத்து 4. புறவணிப்பத்து 5.பாசறைப்பத்து 6.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 7.தோழி வற்புறுத்தப்பத்து 8.பாணன்பத்து 9.தேர்வியங் கொண்ட பத்து 10.வரவுச் சிறப்புரைத்த பத்து என்ற பத்து பருவங்களில் கூறப்பட்டுள்ள தலைப்புகளின் அடிப்படையில் கார்கால நிகழ்வுஶீ பருவம்  நீட்டித்து வரும் தலைவனின் மனப்பாங்குஶீ தலைவன் கூறிச்“ சென்ற காலத்தில் வராமையால் தலைவியின் மனப்பாங்கு போன்ற அடிப்படையில் இக்கட்டுரையின் கருத்துக்கள் அமைகின்றன. இக்கட்டுரையின் வாயிலாக முல்லை நி“லங்களின் முதல்ஶீ கருஶீ உரிப்பொருட்களின் தன்மையினையும்ஶீ மக்களின் அக வாழ்வின் அமைதிகள் அவற்றிற்கு உரியவான சூழ்நிலை அமைதிகளையும்ஶீ முல்லை நில மக்களின் ஒழுக்கத்தின் தன்மைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் முல்லைத்திணை அமைந்துள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையின் கருத்தானது அமைந்துள்ளது.

 

Downloads

Published

2025-05-01