சிலப்பதிகாரத்தில் அடைக்கலப் பண்பாடு- ஓர் ஆய்வு
Abstract
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உரியது. பிறமொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும், அணிக்கும், யாப்பிற்கும் இலக்கணம் உண்டு. தமிழ் மொழியில் மட்டும் தான் வாழ்க்கைக்கு பொருள் இலக்கணம் வகுத்துள்ளனர் இந்த பொருள் இலக்கணம் அகம், புறம் என்று இருவகைப்படும். உள்ளத்து உணர்வுகளால் இசைந்து, இயைந்து வாழ்வதே பண்பாடாகும். குணம், இயல்பு, வழக்கம், பழக்கம் என்பது பண்பாடு சொல்லிற்கு நுட்பமான பொருளைத் தருவதாக அமைகிறது. அன்பு, அடக்கம், அருள், செறிவு, பொறை, நிறை, பெருமை, வாய்மை, மனிதநேயம் ஆகிய அணைத்தும் பண்பாகும். ஒருவரின் இயல்பு தன்மைக்கு ஏற்ப மற்றவர் நடப்பதே பண்பாடாகும். பண்பு என்ற சொல் கன்மை, முறைமை என்ற பொருளில் சிலம்பில் பயன்படுத்தப்பெறுகிறது.பண்பு பல நிலைகளில் அமையும் தனிமனித பண்பாடு, சமுதாயப் பண்பாடு, மறவர் பண்பாடு, அரசர் பண்பாடு, வேட்டுவர் பண்பாடு, ஆய்ச்சியர் பண்பாடு, அடைக்கலப் பண்பாடு போன்ற பல நிலைகளில் அமையக்கூடிய பண்பாடுகளை சிலம்பில் காணலாம். உலகக் காப்பியங்களுள் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் புரட்சியும் புதுமையும் உடையது. சிலப்பதிகாரத்தில் அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்தோம்பல், இன்னார்க்கும் இனியன செய்தல், செய்ந்நன்றி மறவாமை, எளியோர்க்கு உதவுதல், அடைக்கலம் காத்தல் முதலிய இன்னோரன்ன பண்பாடுகளைக் காணலாம். அவற்றுள் இங்குச் சிலப்பதிகாரம் போற்றும் அடைக்கலப் பண்பாட்டைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இளங்கோவடிகள் காட்டும் பண்பாடு, அடைக்கலம் - சொல்லாட்சி, அடைக்கலம் - சிறுவிளக்கம், அடைக்கலம் - சிறப்பு, புறாவின் அடைக்கலம், பசு நீதி கேட்டு - அடைக்கலம் கண்ணகி - அடைக்கலம்