கூத்தராற்றுப்படையில் நிலவியல் பண்பாட்டுப் பதிவுகள்
Abstract
தமிழ் இலக்கியங்களில் நிலம் & பொழுது என்ற கூறுகள் சங்க காலம் முதல் புழக்கத்தில் உள்ளன. சங்க காலத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கியங்களிலும் நிலமும் பொழுதும் தவிர்க்க இயலாத
கூறுகளாக இடம் பெற்றுள்ளன. பிற இலக்கிய வகைகளை விட பயண இலக்கியங்களில் நிலம், பொழுது ஆகிய கூறுகளின் பதிவுகள் தனித்த இடம் பெறுகின்றன. இவ்விரண்டு கூறுகளும் இன்றைய ஆய்வுலகின் தவிர்க்க இயலாத சொல்லாடலாக உருவாகியுள்ள பண்பாட்டு நிலவியல் அல்லது நிலவியல் பண்பாடு என்பதோடு தொடர்பு உடையதாகும். ஆற்றுப்படைகளில் ஒன்றான கூத்தராற்றுப் படை, நிலவியல் சார்ந்த காட்சிகளை, காட்சித் தொகுப்பினை நுணுக்கமாகப் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளது. புலவன், புரவலனைக் காண்பதற்காகச் செல்லும் வழியில் உள்ள நிலங்களின் இயல்பு, மக்களின் உணவு, உறைவிடம், பழக்கவழக்கம், பண்பாடு, உயிரினங்கள், தாவரங்கள் பற்றிய விவரிப்புகள் நிலவியல் நோக்கில் தவிர்க்க இயலாத இடம் பெறுபவை ஆகும். நிலமும் நிலம் சார்ந்த பொழுதும் ஒருவகையில் மக்களின் வாழ்க்கைமுறையைத் தீர்மானிக்கிறது என்பதை நாம் இதன் மூலம் உணர முடிகிறது. மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் கூத்தராற்றுப் படையில் இடம் பெற்றுள்ள நிலவியல் சார்ந்த செ#திகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.