முல்லை நில மக்கள் பண்பாட்டில் கோல்
Abstract
முல்லை நிலத்து மக்களின் வாழ்வியலில் முக்கியமானதாக இரண்டைக் கூறுலாம். ஒன்று அவர்களுடைய தொழில் ஆநிரைகளை மேய்த்தல், இரண்டு ஏறுதழுவுதல். இவ்விரண்டுமே ஆநிரைகளை மையமிட்டதாகவே காணப்படுகின்றன. பசுக்களை மேய்ப்பதற்கு உதவும் கருவியாக விளங்கிய கோல், மக்களினத்தின் தலைவனுடைய ஆட்சிக்குக் குறியீடாக அமைந்து அவன் ஏந்திய கோல் அவனுடைய குடிமக்கள் வணங்கும் கோலாக நின்றது. ஏறுதழுவுதல் என்னும் முறை களவுமணமுறையைக் கற்புமணமுறையாக மாற்றி பெண்களுக்கான விதிமுறைகளை வரையறை செய்வதற்கும், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளது.