பண்டையத் தமிழரின் கடவுள் வழிபாட்டு முறை
Abstract
பண்டையக் காலத்திலிருந்து தமிழ் மக்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களை ஒட்டியே, தாங்கள் நம்பிய கடவுளர்களையும் வழிபட்டு வந்தனர். தமிழகத்தில் மட்டும் அன்றி மற்ற நாடுகளிலும் இப்படித்தான். இன்றும் நாம் சுவைக்கும் நல்ல உணவுகளை நமது குழந்தைகளுக்கு கொடுக்கிறோம், நமது பெற்றோர்காளுக்கும் கொடுக்கின்றோம் நமது நண்பர்கள், சுற்றத்தார்க்கும் கொடுக்கின்றோம் இது இயற்கை, இந்த இயற்கையின் அடிப்படையில் தான் கடவுளர் வழிபாடு நடைபெற்று வந்தது. பெரியபுராணத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் வரலாறு ஒன்றே இதற்கு போதுமான சான்றாகும். திண்ணன என்ற கண்ணப்பர் வேடர் மரபில் வந்தவர் இவர் தனக்கு வேட்டையில் கிடைத்த சிறந்த ஊன்களை உண்டு மகிழ்வதே இவர்களின் வாழ்க்கை. அக்கண்ணப்பர் காளத்தியில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டவுடன் சிவன் மீது அண்பு கொண்டு தாம் சுவைத்துப் பார்த்த ஊனையே சிவலிங்கத்துக்குப் படைத்தார். சிவபெருமானும் அடியேனுடைய அன்பை ஏற்றார். என்பதை பெரியபுராணம் கூறுகிறது. இது மக்கள் தங்கள் படிக்க வழக்கங்களை ஓட்டியே தெ#வங்களைப் போற்றுவார்கள் என்பதையே காட்டுகின்றது