எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவலின் நிலவியல் பண்பாடு
Abstract
நிலத்திற்கும் பண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நிலவியலை மையமாகக் கொண்டே நமது பண்பாடு கட்டமைக்கப்பட்டது என்று கூறலாம். நிலத்தினை பண்படுத்தி அதில் உழவுச் செய்தோம் என்றால். அதில் ஏராளமான தானியங்களை பெறலாம். அதுபோல் ஒரு ஊரின் நிலவியலை ஆராய்ந்தோம் என்றால் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், தொழில்கள் போன்றவைகளை நாம் நன்கு உணர முடியும். இந்த வகையில் எஸ் ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் ஒரு நிலத்தின் தன்மைகளின் வழியே அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் அவர்களது மனநிலை, வாழ்க்கை முறை, தொழில்கள் போன்றவைகளை விளக்க உள்ளது இவ்வாய்வு கட்டுரை.