நெய்தல் நில மக்களின் பொருள்சார் பண்பாடு

Authors

  • கி.ஜா. பிரிசில்லா இணைப்பேராசிரியர் ஏ.டி.எம். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்

Abstract

நெய்தல் நில மக்களின் வாழ்வியலை நுட்பமாக அணுகும் போது அக்கால மக்கள் தங்களின் நிலத்திற்கென்று தனித்தன்மை கொண்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வாழ்ந்து இருப்பது சங்க நூல்களின் வழி அறிய முடிகின்றன. நெய்தல் நில மக்கள் மீன் பிடித்தல், முத்தெடுத்தல், உப்பு விளைவித்தல், மீன் உலர்த்துதல் போன்ற கடல் சார்ந்த தொழில்களை மட்டுமே செய்து வாழ்ந்துள்ளார்கள். மற்ற நில மக்களை விட நெய்தல் நில மக்கள் தங்களுக்கென்று தனித்த நில அடையாளம், குடியிருப்பு, தொழில், பழக்கம், பண்பாடு, உணவு  உடை, அணிகலன் போன்ற பல்வேறு கூறுகளால் தனித்தன்மையுடன் வாழ்ந்தனர். ஆகவே அந்நில மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் பொருள்சார் பண்பாட்டினை மட்டும் கண்டறிந்து வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை.

Downloads

Published

2025-05-01