“என் பெயர் ஜிப்சி” கவிதையில் பண்பாட்டு நிலவியல் சூழல்

Authors

  • ப. கவிப்பிரியா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை

Abstract

பண்பாடு என்பது அனுபவங்களின் சேர்மம் என்று மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி குறிப்பிடுகிறார். அத்தகைய அனுபவங்களின் முயற்சியே மனித குலத்தினை அடுத்தடுத்தகட்ட நகர்வை நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. சங்க இலக்கியத்தின் முதற்பொருளாகச் சுட்டப்படும் நிலம், பண்பாட்டுக் கட்டமைப்பிற்கான அடித்தளம். இதனை உணர்ந்தே அறிஞர் சமூகம், நில அமைப்பினையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருங்கிணைத்து நிலவியல் பண்பாடு என்ற ஆய்வினை தொடங்கியது. மானுடவியல், சமூகவியல், சூழலியல், பண்பாட்டியல், இனவரைவியல் என எல்லா இலக்கிய ஆ#வுத் துறைகளுக்கும் பொதுவான ஒரு கூறு பண்பாட்டு நிலவியல் ஆகும். மனித சமுதாய வளர்ச்சிப் போக்கை உலகம் தோன்றிய நாள் முதலாக இன்றுவரை ஆய்வுமேற்கொண்டு தெளிவுபெற, மனிதன் தோன்றிய, தோற்றுவித்த நிலவியல் சூழல்களையும் அச்சசூழல்களால் உருவான பண்பாட்டுப் பரிணாமங்களையும் நுணுகி ஆராய்தல் அவசியமாகிறது. அவ்வகையில் சூழலியல் ஆர்வலரான நக்கீரன் அவர்களின் பல்வேறு படைப்புகளில் என் பெயர் ஜிப்சி என்ற கவிதையாக்கப் படைப்பு, ஆய்வுலகத்தால், மனித சமூகத்தால் இதுவரை இனங்காணப்படாத பல்வேறு நிலவியல்சூழல் சார்ந்த பண்பாட்டினையும் சொல்லாக வடித்து காட்சிப்படுத்துகிறது. அவற்றுள் சில  கவிதைகளை பண்பாட்டு நிலவியலின் அடிப்படையில் ஆய்ந்து பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

Downloads

Published

2025-05-01