குறுந்தொகையில் நிலவியல் பதிவுகள் (தாவரங்களை முன்வைத்து)
Abstract
இலக்கியங்கள் என்றுமே மானுட வாழ்வியலை எதார்த்தத்துடன் எடுத்துரைப்பனவாக உள்ளன இலக்கியம் அது சார்ந்த மண்ணோடு அங்கு வாழும் உயிரினப் பன்முகத்தையும் எடுத்துரைக்கத் தவறுவதில்லை. எந்நாட்டு மக்களும் ஏற்றமிகு கருத்துக்களைப் பெற்று, அதன்வழி வாழத் தலைப்படுவதற்கு இலக்கியங்கள் பெருந்துணை புரிகின்றன எனலாம். இலக்கியங்கள் வழி எண்ணற்ற கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அவற்றுள் மானுட உலகம் வளர வேண்டும் என்னும் கருதுகோளே முதன்மையாக அமைகிறது. மானுட உலகம் வளர்வதற்கும் அது நிலைபெறுவதற்கும் உறுதுணையாக இருப்பவை அஃறிணை உயிரினங்கள். அவையின்றேல் இவ்வுலகில் எந்த வளமும் ஏற்படப் போவதில்லை. அத்தகு அஃறிணை உயிரினங்களின் பன்முகத்தையும், அவை சார்ந்து வருகின்ற ஒழுகலாறுகளையும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அஃறிணையுயிர்கள் இயங்குயிர்கள், நிலையில் உயிர்கள் என்றும், உயிருடைய காரணிகள், உயிர்சாராக் காரணிகள் என்றும் அழைக்கப்பெறும். முன்னுரை-நிலையுயிர்களும், இயங்குயிர்களும் - தொல்காப்பியத்தில் உயிர்ப் பாகுபாடு - குறுந்தொகையும் பல்லுயிரியமும் - குறுந்தொகையில் மலர்கள் - நெருஞ்சி -மலர்கள் மலரும் காலங்கள்& மகரந்தச் சேர்க்கை - நீர்த்தாவரங்கள்-குவளை, நெய்தல்