குறிஞ்சி மக்களின் சூழலியல்
Abstract
கணினி மயமாக்கப்பட்ட இன்றைய உலகில் மின்னனு தகவல் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவுத்“துறையில் புதிய உச்ச நிலையை அடைந்துவிட்டோம். இருப்பினும் சுற்றுப்புறச் சூழலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழலிலும் வாழ்ந்து வருகின்றோம். இயற்கை வளங்களை அழித்துவிட்டு ஓடிஓடி உழைத்து பணம் சேமித்த பின் ஓய்வெடுக்க இயற்கை சூழலை நாடுகின்றோம். 20&ஆம் நூற்றாண்டில் இயற்கை சீர்குலைவிற்கும் சூழல் தூய்மை இழப்பிற்கும் நாம் காரணமாக இருந்தால் வளரும் தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் இந்த புவியில் வாழ்வதற்கு இடம் இல்லாமல் போகும். காடுகளைக் காப்பாற்றுதல் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் வாயிலாகவும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அத்தகைய நிலையில் தமிழ் இலக்கியங்களில் நிலவியல் பண்பாடு என்கிற கருத்தரங்கு பண்டையத் தமிழர்களின் ஆரோக்கியமான அறிவியல் வாழ்வினைப் பற்றிய செ#திகளை இன்றைய தலைமுறை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்பினை நல்கியுள்ளது. அந்த வகையில் இயற்கையைப் போற்றியும், இயற்கையை வழிபட்டும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்கத் தமிழரின் குறிஞ்சி நில மக்களின் சூழலியல் மலைவளம், பண்பாட்டு வழிமுறைகள், பழக்க வழக்கங்கள், அறத்தோடு நிற்றல், உயிரியல் பரிணாம வளர்ச்சி விலங்குகளின் நடத்தையியல் பற்றிய அறிவியல் அடிப்படைக் கருத்துகளை விளக்குவதாக இவ்வா#வுக் கட்டுரை அமைகின்றது.