மதுரைக்காஞ்சியில் இயற்கை
Abstract
இலக்கிய பாடுபொருள்களில் இயற்கையும் ஒன்றாக அமைகிறது. இலக்கிய பாடு பொருள் அனைத்திலும் இயற்கையும் இணைந்து வருவதே தமிழ் இலக்கியங்களின் சிறப்பாகிறது. தமிழர் வாழ்வியலின் ஒவ்வொர் நிகழ்வும் இயற்கையையே அடித்தளமாகக் கொண்டு அமைகிறது. இயற்கையின் அடிப்படையிலான ஐந்திணை வாழ்வியலே அன்பின் ஐந்திணை வாழ்வியலானது. அதனால் தான் பொருளிலக்கணம் கண்ட ஒரே மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. இத்தகைய தனித் தன்மைகளை உடைய இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் இயற்கை விவரிக்கப்படுவதை இக்கட்டுரை காண விழைகிறது