பெரும்பாணாற்றுப்படையில் நிலவியல் பண்பாடு
Abstract
வாழ்வு குறித்த நெறியையும் பண்பாட்டையும் வளர்ப்பதில் பங்குபெறும் தனிமனிதர் பலரின் கூட்டமைப்பே சமூகம் எனலாம். சமூகம் என்பது பண்பாட்டை வளர்க்கும் களம்.“சமூகம் என்பது சமூக உறவுகள் பின்னிப் பிணைந்துள்ள வலைப் பின்னல்!” என்று மென்ஈவர், பேசு என்பவர்கள் குறிப்பிடுகின்றனர். எல்லா உயிர்களும் பிற உயிர்களைச் சார்ந்து வாழ்வதுபோல, மனிதனும் பிற உயிர்களைச் சார்ந்து வாழ்தலைப் பண்பாகக் கொண்டுள்ளான். பிறரோடு பேசி, பழகி, பகைத்து, கண்டு, கேட்டு, உறவு கொண்டு என பலவற்றைக் கற்றுத் தேற சமூகப்பழக்கம் தேவையாக உள்ளது.