குறிஞ்சி நிலப் பண்பாட்டில் குறவர் இனக்குழுக்கள்
Abstract
தமிழ்க்குடிகளின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் சங்க இலக்கியப் பனுவல்கள் பெரும்பங் காற்றுகின்றன. திணைசார் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சங்கப் பனுவல்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு நிலத்தின் கூறுகளும், அவற்றின் கருப் பொருள்களும், நில மாந்தர்களின் பழக்க வழக்கங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் தமிழ்க்குடிகளின் வரலாற்றையும் வாழ்வியலையும் ஆராய்வதில் இவை முக்கியமானவைகளாக உள்ளன. அங்ஙனமே குறிஞ்சி நில மாந்தர்களாக வாழ்ந்த குறவர்கள் பண்பாடு பற்றிய தகவல்களைச் சங்கப் பனுவல்களின் வழி ஆரா#ந்து காண்பது இவ்வியலின் நோக்கமாகும்