சங்க இலக்கியம் புலப்படுத்தும் நிலமும் மக்களின் வாழ்வும்
Abstract
இயற்கை வளங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நிலமக்களின் வாழ்வியல் முறைகளும் வேறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர நீரும், நிலமும் சரிவர அமைய வேண்டும். ஐவகை நில மக்களின் அக, புற வாழ்க்கையும் நிலவளத்திற்கு ஏற்ப வேறுபட்டு இருந்தன. அகவாழ்க்கையில் பொழுதும் ஒழுக்கமும் நிலத்துடன் ஒன்றிணைந்திருந்தது. தினைப்புனம் காத்தல் களவு வாழ்க்கையின் தொடக்கமாகும். ஏனெனில் தலைவன் & தலைவி சந்திப்பு, பகற்குறி, இற்செறிப்பு இவற்றுக்கு தினைப்புனம் காத்தல் ஒரு காரணமாக அமைகின்றது. மேலும், நிலவளத்தில் மருத நில மக்களின் பொருளாதாரம் உயர்ந்து காணப்பட்டது. தொழில்கள், பழக்கவழக்கங்கள், விளையாட்டுகள், குடியிருப்பு போன்றனவும் நிலவளத்திற்கேற்ப வேறுபட்டு அமைந்துள்ளதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றது