சங்ககால மருத நிலத் தொழில்களும் நிலவியல் பண்பாடும்

Authors

  • திவ்ய தர்ஷினி தமிழ்த்துறை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்

Abstract

உலகம் தோன்றிய காலம் முதல்  மனித  வாழ்க்கை இயற்கையோடு   இயைந்ததாக  அமைந்துள்ளது.          மனிதன்  வாழும்   நிலமும் நிலம் சார்ந்த பொருட்களும் செ#யும் தொழிலுக்குக் காரணமாக       அமைகின்றன. சங்க கால மக்கள் ஐவகை நிலங்களிலும்   இயற்கையோடு இணைந்து வாழ்ந்து          வந்தனர். மக்கள் இயற்கையோடு  இணைந்து தொழில்களையும் மேற்கொண்டனர். குறிஞ்சி            நிலத்தில்  வேட்டைச் சமூக  அமைப்பும் முல்லை நிலத்தில் கால்நடைச் சமூக அமைப்பும் மருத   நிலத்தில்  வேளாண்  சமூக  அமைப்பும்  நெ#தல் நிலத்தில் வணிக சமூக அமைப்பும் நிலவி வந்தது. தொல்காப்பியம், மருத  நிலத்தைத் “தீம்புனல் உலகம்” எனக்  குறிப்பிடுகிறது.  ஏனைய  மரங்களைக்    காட்டிலும் மருதமரங்கள் ஓங்கி  உயர்ந்து சிறப்பாக விளங்கியமையாலேயே இந்த நிலப்பகுதிக்கு மருதம் எனப்              பெயர் பெற்றது   என்பர் ஆ#வாளர்கள்.  இவற்றில் மருதநிலமும்,  அங்கு  நிலவிய  நிலவியல்         பண்பாட்டு அமைப்பும் இங்கு  ஆ#வுக்குரியதாகிறது.  சங்க    இலக்கியங்களில் நிலவியல்  சார்ந்து             அமையும் தொழில்களைப் பற்றியும் அவற்றில்  மருதநிலத்  தொழில்களை பற்றியும்  மருத   நிலப்   பண்பாடும் பற்றி  அடிக்கோடிட்டுக் காட்டுவதாக  இக்கட்டுரை  அமைகிறது

Downloads

Published

2025-05-01