ஏரெழுபது நூலின் நிலவியல் பண்பாடு
Keywords:
ஏரெழுபது, வேளாண்மை, வேளாளர், காவிரியாறு, மருதநிலம், பண்பாடுAbstract
பண்டைய காலத்தில் தமிழர்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்தனர். நிலங்களின் தன்மைக்கேற்ற உணவு உற்பத்தி, பழக்கவழக்கங்கள், விழாக்கள், வாழ்க்கை முறை, சடங்குகள் போன்றவை தோன்றி வாழ்வியலில் பண்பாட்டுக் கூறுகளாக நிலைபெறுகின்றன. ஐவகை நிலங்களுள் மருத நிலமானது சமவெளிப் பகுதிகளாக வேளாண்மை செ#து, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளக் களமாக அமைகின்றது. உழவுத் தொழிலான வேளாண்மைத் தொழிலைச் செய்பவர்கள் வேளாளர்கள் ஆவர். கி. பி 12 ஆம் நூற்றாண்டில் கம்பரால் ஏரெழுபது என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் வேளாளர்களின் நிலை மிகவும் பின்தங்கியதாக இருந்தது. அத்தகைய சமூகச்சூழலில் கம்பர் ஏரெழுபது நூலை இயற்றியுள்ளார். வேளாண் கருவிகள், வேளாளர் சிறப்பு, சோழர்கால வேளாளர்களின் நிலை ஆகியவற்றைப் பற்றி ஏரெழுபது நூலில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேளாண் தொழில் வயலும் வயல் சார்ந்த இடமான மருதநிலத்தின் நிலவியல் பண்பாட்டில் முதன்மையாகவும், உலக உயிர்களுக்கு அடிப்படையாகவும் அமையும் முறைமைகளை ஏரெழுபது நூலின்வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.