சங்க அகஇலக்கியங்களில் நெய்தல்திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களின் பங்கும் சிறப்பும்
Abstract
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் சாதி, சமயங்களைக் கடந்த பொதுமைப் பண்பில் பாடல்கள் பல புனைந்துள்ளனர். மக்களின் வாழ்க்கை நிலைகளை அகம், புறம் என்ற இருநெறிக்கண் பாடிய புலவர்கள் புறத்தை விட அகத்திற்கே முதன்மை கொடுத்துள்ளனர். இதற்குக் காரணம் ஒருவனின் அகவாழ்க்கை சரியாக அமைந்தால்தான் அவனால் புறவாழ்க்கையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற கருத்தாக்கம் கொண்டமையே ஆகும். சுருக்கமாகச் சொன்னால் அகத்தின் பிரதிபலிப்பே புறம் என்ற கருத்தாக்கம் புலவர்களின் சிந்தைகளில் தோன்றியிருக்கின்றது. அந்த வகையில் சங்க அகஇலக்கியங்களில் நெய்தல் திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களின் பங்கும் அதன் சிறப்பும் குறித்து ஆ#வதாக இக்கட்டுரை அமையவுள்ளது