நற்றிணையில் வேளாண்மையும் பண்பாடும்
Abstract
தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கும், மகிழ்விப்பதற்கும் எழுந்தது என்றாலும், அறிவியல் செய்திகளை அறிவிப்பதும் இலக்கியங்களின் நோக்கங்களாக இருந்திருக்கின்றன. அனுபவ நிலையோடு இணைந்த இயற்கை அறிவியல் நுண்ணறிவை அக்கால மக்கள் பெற்றிருந்தனர். இதற்குச் சான்றாக சங்க பாடல்கள் விளங்குவதை உணரமுடிகிறது. இன்றைய அறிவியலாளர் கூறும் அறிவியல் சார்ந்த பன்முகக் கூறுகளை சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களில் காணமுடிகிறது. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ள வேளாண்மை, பண்பாட்டுச் செய்திகளை எடுத்துக்காட்டும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.