சங்க அகஇலக்கியங்களில் நிலம்சார் உளவியல் பண்பாடு
Abstract
உலகில் எத்தனைஉயிரினங்கள் தோன்றினாலும் அவற்றிற்கெல்லாம் மேலானவனாகவும், அவற்றை ஆளுகை செய்பவனாகவும் தன்னைத் தகுதிப்படுத்த நினைத்து இயங்குபவன் மனிதன். அம்மனிதனின் குணாதிசயங்கள் அவன் பெற்றோர், வாழும் இடம், அவன் சுற்றம், பொருளாதார நிலை, சமூக மரியாதை, நட்பு, வாசிக்கும் நூல்கள் என்று பல்வேறு களங்கள் இணைந்து அவனுக்கான வடிவத்தைக் கொடுத்து அவனைச் சமூகத்திற்குள் இயங்கவிடுகின்றன. எத்தனை களங்கள் இருந்தாலும் அவையெல்லாம் மனம் என்னும் களத்தில் இணைந்தே செயல்பாட்டிற்கு வருகின்றன. அவற்றில் மனம் வாழிடச்சுழலோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அதனடிப்படையிலே முழுமையான வடிவம் பெறுகின்றன என்பதை ஆரா#வதாக இவ்ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.