தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்விதழ்

இன்றைய ஆய்வுலகம் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே உள்ளது. புதுப்புது ஆய்வுக்களங்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய ஆய்வுச் சூழலில் உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழிச் சார்ந்த ஆய்வுக்களமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் வேகமெடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அறிவியல் போன்ற பிற துறைச் சார்ந்த ஆய்வுக்களங்களுக்கு போட்டியாக எந்த வித சமரசமுமின்றி தன்னை மிக விரைவாக வளர்த்தெடுக்கும் போராட்டத்திலும் தமிழ் ஆய்வுக்களம் முனைந்துள்ளது.

தமிழ் மொழிச் சார்ந்த ஆய்வாளர்களும், ஆய்வு மாணவர்களும், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது. அதற்கு இந்த தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்விதழானது உறுதுணையாக இருக்க உறுதி பூண்டுள்ளது.

தமிழ் மொழிச் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகள் மட்டுமின்றி தமிழ் பண்பாடு சார்ந்து நடக்கும் ஆய்வுகளையும் கவனப்படுத்தும் வேலையை இந்த ஆய்விதழ் செய்யும்.

நம் மொழி சார்ந்து நடைபெறும் ஆய்வுகளை உலக ஆய்வரங்கத்திற்கு அறிமுகம் செய்விக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இவ்விதழ் நடத்தப்படும். அதோடு கூட தமிழ் ஆய்வுக்கும் பிற துறை ஆய்வுக்கும் ஒரு பாலமாக இவ்வாய்விதழ் விளங்கும். எனவே நம் தமிழ் ஆய்வாளர்கள் தங்கள் காத்திரமான ஆய்வுக்கட்டுரைகளை தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பலாம். கட்டுரைகள், ஆய்விதழின் ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.


Journal of Tamil Culture and Literature

Today, research in every field is constantly expanding. New research areas are also being developed. In such a research environment, the world's most ancient Tamil language laboratory has to accelerate without exception. Not only that, Tamil research is in the process of developing itself very quickly without any compromise to compete with other disciplines such as science.

It is time for Tamil language researchers, research students and Tamil activists to work together. The Journal is committed to supporting it. This journal will focus not only on Tamil language studies but also on Tamil culture studies.

The Journal will be conducted with the vision of introducing our language-based research to the World Symposium. In addition, the journal will serve as a bridge between research in Tamil and other disciplines.  So our Tamil researchers can send their quality research papers in Tamil.  Articles will be reviewed by the editorial board of the journal and accepted for publication.

Current Issue

Vol. 1 No. 4 (2022)
Published: 2022-05-01

Articles

View All Issues